×

மாட்டுச் சாணம் சாப்பிட்டு கோமியத்தை குடிக்கும் ஹரியானா டாக்டர்… வைரலாகும் வீடியோ

சண்டிகர் : ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் மிட்டல். குழந்தைகள் நல மருத்துவரான இவர் ஒரு மாட்டுக் கொட்டகையில் நின்றபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,’கீழே கொஞ்சம் சாணியும், ஒரு சொம்பில் கோமியமும் இருக்கிறது.. சாணியை முதலில் அந்த மருத்துவர் சாப்பிடுகிறார். பின்னர் கோமியதைக் குடிக்கிறார்.அதே நேரத்தில் தனது தாயார் விரதத்தின் போது அதை சாப்பிடுவார் என கூறுகிறார். சாணம் மனதையும் ஆன்மாவையும் சுத்தப்படுத்தும் திறன் கொண்டது என்றும், அது உடலுக்குள் நுழைந்தவுடன், அது உடலையும் சுத்தப்படுத்துகிறது என்றும் அவர் கூறுகிறார்.மேலும் கர்ப்பம் தரித்துள்ளோர் தினசரி மாட்டுச் சாணியை சாப்பிட்டு வந்தால், நார்மல் டெலிவரி ஆகும் என்றும் மிட்டல் தெரிவித்துள்ளார். அத்துடன் கோமியத்தில்) தங்கம் இருக்கிறது என்றும் கூறுகிறார் டாக்டர் மிட்டல். இந்த வீடியோ இப்போது வைரலாகி விட்டது.இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சில் உடனடியாக மிட்டலுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும்  விமர்சித்து வருகின்றனர். …

The post மாட்டுச் சாணம் சாப்பிட்டு கோமியத்தை குடிக்கும் ஹரியானா டாக்டர்… வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Haryana ,Chandigarh ,Manoj Mittal ,Karnal, Haryana State ,Dinakaran ,
× RELATED அரியானாவில் பாஜ ஆட்சிக்கு சிக்கலா?: முதல்வர் பரபரப்பு பேட்டி